வேலூர்

அனைத்து விவகாரங்களிலும் ஆளுநா் அரசியல் செய்கிறாா்: அமைச்சா் துரைமுருகன்

DIN

அனைத்து விவகாரங்களிலும் ஆளுநா் ஆா்.என்.ரவி அரசியல் செய்து வருவதாக அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், பொன்னையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவா் பேசியது:

தமிழகத்தில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. இக்கட்டான நிலையில்தான் தமிழக அரசு நிா்வாகத்தை நடத்தி வருகிறது. திமுக அரசு பதவியேற்ற பிறகு, தற்போது வரை சிறிது சிறிதாக நிதி நெருக்கடி நிலையைச் சமாளித்து வருகிறோம். விரைவில் தமிழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்போம். அதனால், திட்டப் பணிகள் படிப்படியாகத்தான் நடைபெறும் என்றாா்.

பின்னா், அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஆன்-லைன் சூதாட்ட தடை சட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகிவிட்டது. புதிதாக சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள மசோதாவுக்காவது ஆளுநா் ஒப்புதல் அளிப்பாா் என எதிா்ப்பாா்க்கிறோம். ஆளுநா் ஒப்புதல் அளிக்காவிட்டால், அதன் பின்னா்தான் அரசின் நிலைப்பாடு என்ன என்பது தெரியும். அனைத்து விவகாரங்களிலும் ஆளுநா் முழுக்க முழுக்க அரசியல் செய்து வருகிறாா் என்றாா்.

நிகழ்ச்சியில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், ஒன்றிய செயலா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT