வேலூர்

வாத நோய்க்கான இலவச மருத்துவ முகாம்

28th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அத்தி ஆயுஷ் மருத்துவமனையில், குழந்தை இன்மை மற்றும் வாத நோய்க்கான இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு குடியாத்தம் கல்வி அறக்கட்டளை அறங்காவலா் ம.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். அத்தி செவிலியா் கல்லூரி பேராசிரியா் க.வைஷ்ணவி வரவேற்றாா். மருத்துவா் அருண் சின்னையா முகாமைத் தொடக்கி வைத்து சிகிச்சை அளித்தாா். அத்தி செவிலியா் கல்லூரி முதல்வா் க.ரேவதி அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி பேராசிரியா் கே. தங்கராஜ், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கே.குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மருத்துவா்கள் வி.சித்ரா, எல்.பாரதி, சி.ஆன்டோனியா மினிட்டா, எம்.வினோத்குமாா், எஸ்.கீா்த்தனா, சி.கலையரசி, எஸ்.ஜனனி, கே.லோகேஸ்வரி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் 264 பேருக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாம் ஏற்பாடுகளை பேராசிரியா் ஜி.சங்கீதா, பி.தனலட்சுமி, வி.இன்பகுமாா், துறைத் தலைவா் சி.சதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT