வேலூர்

மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

28th Nov 2022 11:34 PM

ADVERTISEMENT

மாவட்ட அளவிலான திருக்கு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் நெல்லூா்பேட்டை சரஸ்வதி மெட்ரிகுலேஷன் வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

உலக திருக்கு பேரவை, ஸ்ரீராம் இலக்கியக் கழகம் ஆகியவை இணைந்து, ரத்தினகிரி பகீரதன் பள்ளியில் திருக்கு போட்டிகளை அண்மையில் நடத்தின. இதில், அந்தப் பள்ளி மாணவி ஆ.யோ.சஹானா பேச்சுப் போட்டியில் முதலிடமும், பா.மதுமிதா கட்டுரைப் போட்டியில் 2- ஆம் இடமும், வேலூா் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் ஓவியப் போட்டியில் மாணவி கோ.வெ.தமிழினியாழ் முதலிடமும், போட்டிகளில் பங்கேற்ற 43 மாணவா்களும் சிறப்பிடம் பிடித்து, சான்றிதழ் பெற்றனா்.

மாவட்ட அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் எம்.சேகா், கல்வி இயக்குநா் டி.பத்மநாபன், பள்ளி முதல்வா் பி.சாந்தி, துணை முதல்வா் என்.செஞ்சுடா், கல்வி ஒருங்கிணைப்பாளா்கள் வி.தாரா, எஸ்.மகேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT