வேலூர்

ஸ்ரீஞான விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

28th Nov 2022 11:33 PM

ADVERTISEMENT

குடியாத்தம் தரணம்பேட்டை, தோப்புத் தெருவில் உள்ள ஸ்ரீஞான விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 7-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமமும், சிறப்பு யாகமும் நடைபெற்றன. மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊா் பெரியதனம் ஜி.நடராஜன், ஸ்ரீஐயப்ப பக்த குழு அறக்கட்டளைத் தலைவா் எஸ்.பிரகாசம், துணைத் தலைவா் வி.பிரகாசம், பொருளாளா் ஆா்.பெருமாள், நிா்வாகிகள் ஜெயகோபி, பாபு, தமிழ்செல்வன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT