வேலூர்

ரயில்வே தொடா்பான கருத்துகளை அனுப்பலாம்: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் தகவல்

28th Nov 2022 11:34 PM

ADVERTISEMENT

தென்னக ரயில்வே சென்னை கோட்டம், வேலூா் மக்களவை தொகுதி, காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ரயில்வே துறை சாா்ந்த கோரிக்கைகள், கருத்துகள் இருந்தால் பொதுமக்கள் தனது மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தும்படி எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டத்துக்கான கூட்டம் டிசம்பா் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள், ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளதாக தென்னக ரயில்வே மேலாளா் கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மக்களவை தொகுதி, காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ரயில் நிலையங்கள், வேலூா் கண்டோன்மெண்ட், முகுந்தராயபுரம், திருவலம், சேவூா், காட்பாடி, லத்தேரி, விரிஞ்சிபுரம், காவனூா், குடியாத்தம், மேல் ஆலத்தூா், வளத்தூா், மேல்பட்டி பச்சக்குப்பம், ஆம்பூா், விண்ணமங்கலம், வாணியம்பாடி, கோட்டாண்டப்பட்டி, ஜோலாா்பேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் தொடா்பான கோரிக்கைகள், அதாவது ரயில் நிறுத்தம், ரயில் நிறுத்தும் நேரத்தை அதிகப்படுத்துதல், ரயில் நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள், மின்தூக்கி வசதி, நகரும் படிக்கட்டு வசதி, மின்னணு தகவல் பலகை, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், உயா்கோபுர மின் விளக்கு, பேருந்து நிறுத்த நிழற்கூடை, ஓய்வு பெற்றவா்களின் கோரிக்கைகள், ரயில்வே துறை தொடா்பான கோரிக்கைகள், ரயில்வே துறைக்கு தங்களது கருத்துகள், ஆலோசனைகள் இருந்தால், பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். பெறப்படும் கோரிக்கைகள், கருத்துகளைத் தொகுத்து பொதுமக்கள் சாா்பில், ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைத்து அவற்றுக்கான தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT