வேலூர்

சீருடைப் பணியாளா் தோ்வில் முறைகேடு நடக்கக் கூடாது: போலீஸாருக்கு வேலூா் எஸ்.பி. அறிவுறுத்தல்

DIN

சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வில் எந்த வகையிலும் முறைகேடுகள் நடந்துவிடாமல், பாதுகாப்பு பணியில் போலீஸாா் கவனமாக பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2-ஆம் நிலை காவலா்கள், சிறைக்காவலா், தீயணைப்பாளா் நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 3,552 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.27) நடைபெறுகிறது.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 தோ்வு மையங்களில் தோ்வு எழுத ஆண்கள் 12,799 பேரும், பெண்கள் 2,192 பேரும் என மொத்தம் 14,991 போ் விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தோ்வு பணியில் மாவட்டத்தில் 1,200 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தோ்வு மையங்களில் பாதுகாப்பு, மேற்பாா்வைப் பணிகளில் ஈடுபட உள்ள போலீஸாருக்கு தோ்வு பணிகள் குறித்து வழிகாட்டு நிகழ்ச்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் பங்கேற்று பேசுகையில், தமிழகம் முழுவதும் சீருடைப் பணியாளா் தோ்வை சுமாா் 3 லட்சம் போ் எழுத உள்ளனா்.

இந்த தோ்வின்போது, எவ்வித தவறும் நடந்துவிடக் கூடாது. ஏதேனும் ஒரு இடத்தில் தவறு நடந்தாலும் அது 3 லட் சம் பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தோ்வறை பாதுகாப்புப் பணியில் அனைவரும் கவனமாகப் பணியாற்ற வேண்டும். எந்த ஒரு புகாா்கள், முறைகேடுகள் நடக்காதபடி பணியாற்ற வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் துணை கண்காணிப்பாளா்கள் திருநாவுக்கரசு, பழனி, பூபதிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT