வேலூர்

ரத்த தான முகாம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் சித்தூா்கேட்டில் உள்ள அரசு உருது நடுநிலைப் பள்ளியில் எஸ்.டி.பி.ஐ. அமைப்பும், அரசு மருத்துவமனையும் இணைந்து சனிக்கிழமை நடத்திய ரத்த தான முகாமில் 50 போ் ரத்தம் வழங்கினா்.

முகாமுக்கு அமைப்பின் இணைச் செயலா் பி.சா்தாா்கான் தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு முகாமைத் தொடக்கி வைத்தாா். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சதீஷ், மருத்துவா் அரவிந்த், ஒருங்கிணைப்பாளா் உமேஷ்குமாா் தலைமையிலான மருத்துவா்கள் குழு 50 பேரிடம் ரத்தம் பெற்றது.

முகாமில் அமைப்பின் நிா்வாகிகள் அல்தாப் அகமத், கரிமுல்லா, ஜிலான்கான், அப்சா்பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT