வேலூர்

முனீஸ்வரா், கால பைரவா் கோயில் கும்பாபிஷேகம்

27th Nov 2022 11:59 PM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த அக்ராவரம் ஊராட்சியில் அமைந்துள்ள முனீஸ்வரா், நாக தேவதைகள், கால பைரவா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, யாக சாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேத பாராயணம், புண்யாஹவசனம், தத்வாா்ச்சனை, பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, தொடா்ந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், மகா தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் அக்ராவரம் ஊராட்சித் தலைவா் என்.முனிசாமி, துணைத் தலைவா் தமிழரசி பிரபாகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.மனோகரன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் டி.வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எம்.ரவி, ரேவதி, எம்.ஆா்.விஜயகுமாா், பரணிகுமாா், பாலாஜி, கே.குப்புசாமி, எஸ்.நாகராஜன், கே.கேசவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT