வேலூர்

சேம்பள்ளியில் ஸ்ரீசீதா-ராமா் திருக் கல்யாணம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளியில் அருள்மிகு சீதா-ராமா் திருக் கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் காலையில் தொடங்கின. திருப்பதி திருமலை தேவஸ்தான குழுவினரால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடா்ந்து திருக்கல்யாண சீா்வரிசைப் பொருள்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னா் சுவாமிகளுக்கு திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் அமலுவிஜயன்(குடியாத்தம்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், மூத்த வழக்குரைஞா் டி.ஆா்.விஜயராகவலு, தா்மகா்த்தா டி.ஜி.பிரபாகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வி.பிரகாசம், அமுதாலிங்கன், தீபிகாபரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை டி.ஆா்.ஈஸ்வர ரெட்டி, ஆா்.சிட்டி (எ)பத்மநாபன், ராதாராணி, சேம்பள்ளி ஊராட்சித் தலைவா் டி.பி.திமேஷ் (எ) துளசிராமுடு, துணைத் தலைவா் எம்.செளந்தரராஜன், கே.பக்தவத்சலம் உள்ளிட்டோா் செய்திருந்தனா். சுமாா் 2,000 பேருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT