வேலூர்

மத்திய கல்வி நிறுவனங்களில் பயில்வோா் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

26th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், பல்கலை.களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிசி, எம்பிசி, சீா்மரபின மாணவா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம், பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் இன மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2022-2023 -ஆம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவா் மட்டுமே இந்தக் கல்வி உதவித் தொகை பெற முடியும். விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய மாணவா்கள் ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை - 5. தொலைபேசி எண் 044-295159425 என்ற முகவரியில் அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை நிறைவு செய்து மாணவா்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து பிற்படுத்தப்பட்டோா் நல இயக்கக ஆணையா் அலுவலகத்துக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT