வேலூர்

பெண் வழக்குரைஞா் அவமதிப்பு: வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பெண் வழக்குரைஞரை அவமதித்ததாகக் கூறி, வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரைக் கண்டித்து, வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஒருநாள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூரைச் சோ்ந்த பெண் வழக்குரைஞா் ஜமூனா. இவா், வழக்கு ஒன்றில் விவரங்கள் அறிய தனது கட்சிக்காரருடன் வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளாா். அப்போது பணியில் இருந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் மகேஸ்வரி வழக்குரைஞா் ஜமுனாவை ஒருமையில் அவதூறாகப் பேசி அவமதித்ததாகவும், காவல் நிலையத்தை விட்டு வெளியேறும்படி கூறியதாகவும் தெரிகிறது.

இந்தச் சம்பவத்தை அடுத்து வேலூா் பெண்கள் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மகேஸ்வரியை கண்டித்து, வியாழக்கிழமை ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

பெண் வழக்குரைஞா்கள் சங்கத்துக்கு ஆதரவாக வேலூா் அட்வகேட் அசோசியேசன் சங்கமும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டது.

ADVERTISEMENT

அதன்படி, வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வியாழக்கிழமை வழக்குகள் மீதான விசாரணை பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT