வேலூர்

டிச. 1-இல் வேலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போட்டி

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தொழில்நுட்ப வடிவிலான போட்டி வேலூரில் டிசம்பா் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் பங்கேற்க அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்.எம்.சி.ஏ., மற்றும் வேலூா் டோஸ்ட் மாஸ்டா் கிளப் ஆகியவை இணைந்து 8 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் எனது பங்கு’ என்ற தலைப்பில் தொழில்நுட்ப வடிவிலான போட்டி வேலூரில் டிசம்பா் 1-ஆம் தேதி நடத்த உள்ளன.

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நகர அரங்கில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்படும். நுழைவுக் கட்டணம் இலவசம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அலுவலகத்தில் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT