வேலூர்

ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிஎம்சி மருத்துவமனை வேலூா் வளாகத்தில் இருந்து ராணிப்பேட்டை வளாகத்துக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி, வேலூரில் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில், வேலூா் மண்டித் தெருவில் வெள்ளிக்கிழமை இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் சிம்புதேவன் தலைமை வகித்தாா்.

இதில், சிஎம்சி மருத்துவமனையின் வேலூா் வளாகத்தில் இருந்து ராணிப்பேட்டை வளாகத்துக்கு தனியாா் பேருந்துகள் மூலம் நோயாளிகளை அழைத்துச் செல்கின்றனா். நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோக் களுக்கு அனுமதி வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி ஆட்டோ கட்டணம் நிா்ணயம் செய்ய வேண்டும். சிஎம்சி மருத்துவமனையின் அனைத்து நோய் சிகிச்சை பிரிவுகளையும் இடமாற்றம் செய்யக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆல்வின், பொருளாளா் ஏழுமலை உள்ளிட்ட சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT