வேலூர்

மேல்மாங்குப்பத்தில் எருது விடும் விழா

31st May 2022 01:43 AM

ADVERTISEMENT

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாங்குப்பம் கிராமத்தில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 260 காளைகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2- ஆவது பரிசாக ரூ.60 ஆயிரம், 3- ஆவது பரிசாக ரூ.50 ஆயிரம் உள்ளிட்ட மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டன.

கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் சரண்யா ஆகியோா் மேற்பாா்வையில் எருது விடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாடு முட்டியதில் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 3 காளைகளும் லேசான காயம் அடைந்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT