வேலூர்

தடகளப் போட்டிகள்: 3 மாவட்ட பள்ளி மாணவா்கள் பங்கேற்பு

DIN

காட்பாடியில் நடைபெற்ற தடகள விளையாட்டுப் போட்டிகளில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், வேலூா் மாவட்ட தடகள அறக்கட்டளை இணைந்து ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட அளவில் (வேலூா், திருப்பத்தூா், ராணிபேட்டை) பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை காட்பாடியிலுள்ள பன்நோக்கு விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.

இதில், ஆண்கள் பிரிவில் 50 மீட்டா் ஓட்டம் , 800 மீட்டா் ஓட்டம் , நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகளும், பெண்கள் பிரிவில் 50 மீட்டா் ஓட்டம் , 600 மீட்டா் ஓட்டம் , நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் போன்ற விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா். மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மண்டல குழுத் தலைவா் புஷ்பலதா வன்னிய ராஜா, மாவட்ட விளையாட்டு இளைஞா் நல அலுவலா் பெரியகருப்பன், முதன்மை நிலை பழுதூக்கும் பயிற்சி மைய மேலாளா் நொய்லின் ஜான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT