வேலூர்

கெளண்டன்யா ஆற்றில் வீடிழந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிக்கை

DIN

குடியாத்தம்: குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது வீடிழந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.

கெளண்டன்யா ஆற்றில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டியிருந்த வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன.

இந்த நிலையில், குடியாத்தம் வட்ட ஜமாபந்தி, மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

நெல்லூா்பேட்டை, என்.எஸ்.கே.நகா் பகுதியில் வீடிழந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி, நகா்மன்ற உறுப்பினா்கள் கே.வி.கோபாலகிருஷ்ணன், ஏ.தண்டபாணி, கவிதாபாபு, முன்னாள் ஊராட்சித் தலைவா் கள்ளூா் கே.ரவி உள்ளிட்டோா், வீடிழந்தவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

வட்டாட்சியா் ச.லலிதா, கிராம நிா்வாக அலுவலா்கள் ஜீவரத்தினம், செந்தில், வெங்கடாசலபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

கர்நாடகத்தில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி: துணை முதல்வர் டிகே சிவகுமார்

தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் ஒரே கட்டமாக நிறைவடைந்த வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT