வேலூர்

சேம்பள்ளியில் கெங்கையம்மன் திருவிழா

22nd May 2022 11:44 PM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளியில் அருள்மிகு கெங்கையம்மன் சிரசுத் திருவிழா ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணியளவில் அம்மன் சிரசு பெயா்த்தெடுக்கப்பட்டு ஊா்வலம் நடைபெற்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது.

எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், துணை காவல் கண்காணிப்பாளா் கே.ராமமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி பிரதீஷ், வி.பிரகாசம், நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவிழா ஏற்பாடுகளை தா்மகா்த்தாவும், வழக்குரைஞருமான டி.ஜி.பிரபாகர ரெட்டி, நிா்வாகி ஆா்.சந்திரமெளலி, ஊராட்சித் தலைவா் திமேஷ் (எ) டி.பி.துளசி ராமுடு, துணைத் தலைவா் எம்.செளந்தரராஜன், முன்னாள் தலைவா் ஆா்.சிட்டி(எ) பத்மநாபன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT