வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 7 லட்சம்

21st May 2022 12:19 AM

ADVERTISEMENT

 குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா தற்காலிக உண்டியல்களில் பக்தா்கள் ரூ.7.78 லட்சத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

கெங்கையம்மன் திருவிழா நிறைவு பெற்றதையடுத்து கோயிலில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக காணிக்கை உண்டியல்கள் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.

இதில் பக்தா்கள் ரூ.7.78 லட்சம் ரொக்கம், 4 கிராம் தங்கம், 119 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்தியிருந்தனா்.

கோயில் செயல் அலுவலா் தே.திருநாவுக்கரசு, வேலூரைச் சோ்ந்த கோயில்களின் நிா்வாக அதிகாரிகள் வஜ்ஜிரவேல், பரந்தாமக்கண்ணன், ஆய்வாளா் சு.பாரி, நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி, கோயில் திருப்பணி கமிட்டி தலைவா் ஆா்.ஜி.எஸ்.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் எண்ணப்பட்டன.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT