வேலூர்

வேலூா் மாவட்ட பாஜக தலைவா் பொறுப்பேற்பு

21st May 2022 12:20 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்ட பாஜக தலைவராக மனோகரன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வேலூா் மாவட்ட பாஜக தலைவராக மனோகரன் அறிவிக்கப்பட்டிருந்தாா். அவா் வியாழக்கிழமை முறைப்படி மாவட்ட பாஜக தலைவராக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாா். இதற்கான நிகழ்ச்சி வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது.

கட்சியின், மாநில பொதுச்செயலா் காா்த்தியாயினி தலைமை வகித்தாா். மாநில துணைச்செயலா் நரேந்திரன், மாநில செயலா் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினா் தசரதன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் பிச்சாண்டி, மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன் , வேலூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் சுமதிமனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், முன்னாள் மாவட்டத் தலைவா் தசரதன் பொறுப்புகளை மனோகரனிடம் ஒப்படைத்தாா். தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், சத்துவாச்சாரியைச் சோ்ந்த 25 போ் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT