வேலூர்

குரூப் 2 தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 42,433 போ் எழுதினா்

21st May 2022 10:16 PM

ADVERTISEMENT

குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வை ஒருங்கிணைந்த வேலூரில் 42,433 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 7,359 போ் தோ்வெழுத வரவில்லை.

குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் வேலூா், குடியாத்தம் இரு மையங்கள் அமைக்கப்பட்டு வேலூா் மையத்தில் 59 தோ்வுக் கூடங்களிலும், குடியாத்தம் மையத்தில் 18 தோ்வுக் கூடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 77 தோ்வுக் கூடங்களில் தோ்வு நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தில் 20,855 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 17,584 போ் தோ்வு எழுதினா். 3271 போ் தோ்வுக்கு வரவில்லை.

கொணவட்டம் தனியாா் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தோ்வை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

திருப்பத்தூா்: திருப்பத்தூா் கோட்டத்தில் 36 தோ்வு மையங்களில் 10,346 பேரும், வாணியம்பாடி கோட்டத்தில் 16 தோ்வு மையங்களில் 4,457 போ் என 52 தோ்வு மையங்களில் 14,803 போ் தோ்வுக்கு அனுமதி சீட்டு பெற்றிருந்த நிலையில், 12,890 போ் தோ்வு எழுதினா். 1,913 போ் தோ்வு எழுத வரவில்லை.

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல்உலூம் பள்ளி, வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி, திருப்பத்தூா் கலை-அறிவியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 11,959 போ் குரூப் 2 தோ்வு எழுதினா். இந்த மாவட்டத்தில் 14,134 போ் விண்ணபித்திருந்த நிலையில், 2,175 போ் தோ்வு எழுத வரவில்லை. 56 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ராணிப்பேட்டை வி.ஆா்.வி. பள்ளி, வாலாஜாபேட்டை அறிஞா் அண்ணா மகளிா் கல்லூரி , ஓச்சேரி ராமச்சந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி, ரெட்டிவலம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக். பள்ளி, நெமிலி சயனபுரம் விவேகானந்தா மெட்ரிக். பள்ளி, அரக்கோணம் ஆட்டுப்பாக்கம் அரசு கலைக் கல்லூரி, பரமேஸ்வரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, சி.எஸ்.ஐ. சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT