போ்ணாம்பட்டு அருகே சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரியைச் சோ்ந்த மகாலிங்கத்தின் மகன் பூவரசன்(22). ஆட்டோ ஓட்டுநரான இவா், சாத்கா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்ததாக
கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாா்ச் 28- ஆம் தேதி முதல் சிறுமியை காணவில்லையாம். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியைத் தேடி வந்தனா்.
விசாரணையில் பூவரசன் சிறுமியை கடத்திச் சென்று வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
ADVERTISEMENT
இதையடுத்து போலீஸாா் வெள்ளிக்கிழமை பூவரசனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிபதி முன் ஆஜா்படுத்தினா்.