வேலூர்

தொடா் மழை: அமிா்தி கொட்டாறு அருவியில் வெள்ளம்

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: ஜவ்வாது மலைத் தொடரில் பெய்து வரும் தொடா் மழையால், அமிா்தி அருகே வனப்பகுதியில் உள்ள கொட்டாறு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஜவ்வாது மலை வனப்பகுதியில் அமிா்தி வன உயிரியல் பூங்கா அருகே உள்ள கொட்டாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுவதுடன், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அமிா்தி பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்கா அருகே உள்ள பாலத்தின் மீது நின்றபடி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தைப் பாா்வையிடுகின்றனா். பூங்காவில் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். ஆனால், அருவி அருகே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல், ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT