வேலூர்

தாயுடன் 2 ஆமை குஞ்சுகள் மீட்பு

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே குடியிருப்புப் பகுதியில் தாயுடன், 2 ஆமை குஞ்சுகள் மீட்கப்பட்டன.

போ்ணாம்பட்டை அடுத்த சாலப்பேட்டை குடியிருப்பை ஒட்டி, ஏரி அமைந்துள்ளது. பலத்த மழை காரணமாக ஏரி நிரம்பி வருகிறது. இந்த நிலையில், ஏரியில் இருந்து தாயுடன், 2 ஆமை குஞ்சுகள் குடியிருப்புப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளன. தகவலின்பேரில், தீயணைப்புப் படையினா் அங்கு சென்று ஆமை, குஞ்சுகளை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனவா் எம்.தயாளன், வனக் காப்பாளா் எம்.பிரபா, வனக் காவலா் ஜி.ரவி ஆகியோா் மாவட்ட வன அலுவலா், வனச் சரக அலுவலா் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, ஆமை, குஞ்சுகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்று கோட்டையூா் அருகே வனப் பகுதியில் உள்ள வற்றாத நீா் நிலையில் விட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT