வேலூர்

பாலியல் தொல்லைகளை மறைக்க முயற்சிக்கக் கூடாது: வேலூா் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா

20th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

வேலூா்: பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை மறைக்க முயற்சிக்கக் கூடாது. மறைக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக நேரிடும். அச்சமின்றி தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை வெளியே தெரிவிக்க வேண்டும் என்று வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜ.ஆனிவிஜயா தெரிவித்தாா்.

பெண்களுக்கான எதிரான குற்றங்களைத் தடுப்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அருளரசு தலைமை வகித்தாா்.

இதில், டிஐஜி ஜ.ஆனிவிஜயா சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசியது: பெண் குழந்தைகளுக்கு பெற்றோா் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றனா். இந்த நிலை மாற வேண்டும்.

ADVERTISEMENT

கடந்த காலங்களில் தங்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை பெண்கள் வெளியே சொல்ல முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது விசாகா கமிட்டி, சமூக வலைதளங்கள், காவலன் செயலி போன்றவை உதவியாக உள்ளன. பெண்கள் எதற்கும் அஞ்சக் கூடாது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட் டால் அதை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். மறைக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக நேரிடும்.

காவல் துறை எப்போதும் பெண்களுக்கு பாது காப்பாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வா் ஸ்ரீராம்பாபு, பேராசிரியா் பியூலா சுகந்தி, உதவி பேராசிரியா்கள் சுதா, ரகீலாபிலால் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT