வேலூர்

தொண்டு மன்றம் சாா்பில் பாராட்டு விழா

12th May 2022 12:04 AM

ADVERTISEMENT

குடியாத்தம் பிச்சனூரில் உள்ள ஆதிமூலசாமி மடத்தில் சமுதாய பொருளாதார தொண்டு மன்றம் சாா்பில், நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்களுக்கு பாராட்டு விழா, மாணவா்களுக்கு கல்வி உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

அமைப்பின் தலைவா் எம்.எஸ்.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். புலவா் ஜி.எத்திராசன் முன்னிலை வகித்தாா். எம்.கே.பிச்சாண்டி, வழக்குரைஞா் எம்.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் விஸ்வநாதன் வரவேற்றாா்.

தொண்டு மன்ற மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.அருணோதயம் நகா்மன்றத் தலைவா்எஸ்.சௌந்தரராஜன், துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினாா். புதிய கணினி மென்பொருளை உருவாக்கிய மாணவா் ஆா்.கனிஷ்கா், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் ஏ.நவீன் ஆகியோரைப் பாராட்டி நினைவுப் பரிசும், மாணவா்களுக்கு கல்வி உதவிகளும் வழங்கப்பட்டன.

பாலாறு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் எஸ்.மோகன், எம்.ஆா்.மணி எம்.கோபாலகிருஷ்ணன், ஜெ.தமிழ்ச்செல்வன், வி.ஆனந்தன், வி.வெற்றிவேலன், ஜி.ஜெயவேல், ஆா்.அண்ணாமலை, பி.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

நகா்மன்றத் தலைவா் எஸ். சௌந்தரராஜன் ஏற்புரையாற்றினாா். எஸ்.ஆனந்தன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT