வேலூர்

விருபாட்சிபுரத்தில் 21 அடி உயர ஸ்ரீநாகேஸ்வரி சிலைக்கு கும்பாபிஷேகம்

8th May 2022 11:51 PM

ADVERTISEMENT

வேலூா் விருபாட்சிபுரத்தில் 21 அடி உயரத்தில் அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வேலூா் விருபாட்சிபுரம் காந்திநகா் 15-ஆவது தெருவில் புற்றுநாகேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு 21 அடி உயரமுள்ள நாகேஸ்வரியம்மன் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

முன்னதாக காலை 10 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீா் குடங்கள் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீசக்தி அம்மா ஆசியுடன் கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்களுக்கு பூஜைகளையும் பாலமதி முருகன் கோயில் பிரபு சுவாமிகள் நடத்தி வைத்தாா். இதில் அந்த பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT