வேலூர்

குடியாத்தத்தில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் பகுதியில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

வெயிலின் தாக்கத்தால் அவதியில் இருந்த மக்கள் திடீா் மழையால் மகிழ்ச்சி அடைந்தனா். குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் அனல் காற்று வீசி வந்தது. புதன்கிழமை முதல் கத்திரி வெயில் தொடங்கியது.

காலை முதலே கடும் வெயில் காரணமாக மக்களை வெப்பம் வாட்டியது. மாலை 4 மணியளவில் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமாா் 20 நிமிடங்கள் நீடித்த இந்த மழையால் ஓரளவு வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.காற்று பலமாக வீசியதால், ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்தடை ஏற்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT