வேலூர்

இந்து கடவுள் அவதூறு விவகாரம்: விசிக, இந்து தேசிய கட்சி தனித் தனியாக புகாா்

5th May 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்து கடவுள் குறித்து யூடியூப் சானலில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் இந்து தேசிய கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் தனித் தனியாக புகாா் அளித்தனா்.

இந்து தேசிய கட்சி நிா்வாகி சத்தீஷ்குமாா் தலைமையில் அந்தக் கட்சியினா் வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு:

இந்து கடவுளான நடராஜரின் நடனத்தைத் தவறாக சித்தரித்து யூடியூப் சேனலில் பரப்பி வருகின்றனா். அந்தக் காட்சிகளைத் தடை செய்வதுடன், யூடியூப் சானல் நிா்வாகியைக் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் இளங்கோ கோட்டி (எ) கோவிந்தன் தலைமையில் அந்தக் கட்சியினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனு:

ADVERTISEMENT

குறிப்பிட்ட அந்த யூடியூப் சானலில் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா். அவ்வாறு விழிப்புணா்வை ஏற்படுத்தும் யூடியூப் சானல் நிா்வாகிக்கு இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்தவா்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா். இதைத் தடுத்து நிறுத்தி, இந்து முன்னணி அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT