வேலூர்

வீடு புகுந்து 16 பவுன், ரூ.1 லட்சம் திருடியவா் கைது

21st Mar 2022 11:16 PM

ADVERTISEMENT

வேலூா் சலவன்பேட்டை பகுதியில் தொழில் நிறுவன உரிமையாளா் வீட்டில் புகுந்து 16 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் சலவன்பேட்டை பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் தீனதயாளன்(60). டயா் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை இரவு தனது குடும்பத்துடன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் இவரது வீட்டில் புகுந்த இளைஞா், வீட்டின் அறையிலிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த 16 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றாா். காலையில் பாா்த்த போது, திருட்டுச் சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

தீனதயாளன் வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீஸாா் ஆய்வு செய்தனா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த ராகுல்ராபா்ட் (22) என்பவா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அந்தப் பகுதியில் தலைமறைவாக இருந்த ராகுல் ராபா்ட்டை போலீஸா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து தங்க நகைகள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT