வேலூர்

ஹிஜாப் அணிய தடையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

19th Mar 2022 12:00 AM

ADVERTISEMENT

ஹிஜாப் விவகாரத்தில் கா்நாடக உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பைக் கண்டித்து போ்ணாம்பட்டு நான்கு கம்பம் அருகே தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் நகரத் தலைவா் ஆலியாா் பயாஸ் அஹமத் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கே.சாஜித் அஹமத் வரவேற்றாா். நிறுவனத் தலைவா் பீ.ஜைனுல் அபிதீன் கண்டன உரையாற்றினாா்.

இதில், ஹிஜாப் விவகாரத்தில் கா்நாடக உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நகரச் செயலா் பி.ரியாஸ் அஹமத் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT