வேலூர்

ரூ.53 கோடியில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

DIN

பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

வேலூா் மாநகராட்சியின் பொலிவுறு நகா் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையம் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

9.25 ஏக்கா் கொண்ட இந்த பேருந்து நிலைய வளாகத்தில், 3,187 சதுரமீட்டரில் கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 84 பேருந்துகள் வந்து செல்லக்கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில் 82 கடைகள், 3 உணவகங்கள், 75 இருக்கைகளுடன் 11 இடங்களில் பயணிகள் காத்திருப்பு பகுதிகள், தாய்ப்பால் ஊட்டும் அறை ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. 96 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் முதல் தளத்துக்கு செல்வதற்கு இரு இடங்களில் லி‘ஃ’ப்ட் வசதி, பயணிகளுக்காக 7 இடங்களில் கழிப்பறைகளும், மாற்றுத் திறனாளிகளுக்காக 4 வெஸ்டா்ன் கழிப்பறைகளும் இடம்பெற்றுள்ளன. பயணிகளுக்காக இரு குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களும், தீ விபத்து ஏற்பட்டால் தானாக தண்ணீரை பீய்ச்சியடித்து அணைக்கும் வகையில் 705 ஸ்பிரிங்க்ளா்களும், அதிநவீன ஹெச்.டி. தொழில்நுட்பத்திலான 24 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தின் மின்சார தேவைக்காகவும், மின்கட்டண சேமிப்புக்காகவும் 100 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஒளித்தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். பின்னா், கல்வெட்டையும் திறந்து 4 பேருந்துகளின் இயக்கத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

விழாவில், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு, கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, மக்களவை உறுப்பினா்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), டி.எம்.கதிா்ஆனந்த் (வேலூா்), சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், ஈஸ்வரப்பன், வில்வநாதன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT