வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

DIN

திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூன் 29, 30) நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா். இதையொட்டி, இந்த 3 மாவட்டங்களிலும் சுமாா் 6,000 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை புதன், வியாழக்கிழமை (ஜூன் 29, 30) நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) இரவே ஆம்பூருக்கு வந்தாா். தொடா்ந்து, திருப்பத்தூரில் ரெட்டைமலை சீனிவாசன்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை காலை 9.15 மணிக்கு முதல்வா் திறந்து வைக்கிறாா்.

பின்னா், வாணியம்பாடி சாலை தொன்போஸ்கோ பள்ளியில் காலை 9.45 மணிக்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு அவா் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறாா்.

தொடா்ந்து, நண்பகல் 12.30 மணியளவில் வேலூரில் பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கிறாா். பின்னா், வேலூா் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வா், மாலை 5 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறாா்.

இரவு 7 மணியளவில் ராணிப்பேட்டைக்குச் சென்று அங்குள்ள தனியாா் விடுதியில் தங்குகிறாா். இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை (ஜூன் 30) காலை 9.30 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் திறந்து வைத்து, காலை 9.45 மணிக்கு ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

காலை 11 மணியளவில் ராணிப்பேட்டையிலுள்ள பிஞ்ஜி ஏரியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா். தொடா்ந்து, பிற்பகலில் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா். இந்த விழாக்களில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

முதல்வா் வருகையையொட்டி, இந்த 3 மாவட்டங்களிலும் 3 காவல் துணைத் தலைவா்கள் (டிஐஜி) 5 மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில், சுமாா் 6,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வேலூா் சரக காவல் துணைத் தலைவா் ஜ.ஆனிவிஜயா தெரிவித்தாா்.

இதனிடையே, முதல்வா் வருகையையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT