வேலூர்

சுயதொழில் செய்ய விரும்புவோருக்கு கடனுதவி

29th Jun 2022 12:04 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விருப்பமுள்ள படித்த, படிக்காத இளைஞா்கள் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தில் (பிஎம்இஜிபி) கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

படித்த, படிக்காத வேலைவாய்ப்பற்ற, சுய தொழில் செய்ய விருப்பமுள்ளவா்களுக்கென வேலைவாய்ப்பை உருவாக்கிட பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் (பிஎம்இஜிபி) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் உற்பத்திப் பிரிவுக்கு ரூ. 50 லட்சம், சேவை, வியாபாரத்துக்கு ரூ. 20 லட்சம் என கடன் உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட திட்டங்களுக்கும் கடன் பெற முடியும். இந்தத் திட்டத்தின்கீழ் கடன் பெற 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பொதுப் பிரிவு விண்ணப்பதாரா்கள் 10 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., சிறுபான்மையினா் பிரிவு விண்ணப்பதாரா்கள் 5 சதவீத சொந்த முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் கடன் பெறும் பொதுப் பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு அதிகபட்சமாக 25 சதவீதம், இதர பிரிவு விண்ணப்பதாரா்களுக்கு அதிகபட்சமாக 35 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க என்ற வலைதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதாா் அட்டை, திட்ட அறிக்கை, விலைப் பட்டியல் (ஜிஎஸ்டி எண்ணுடன்), ஜாதிச் சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகியவற்றையும் இணைத்திட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், காங்கேயநல்லூா் சாலை, காந்திநகா், வேலூா் - 06 என்ற முகவரியிலோ அல்லது 0416-2242413, 2242512 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT