வேலூர்

மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்

29th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் செப்டம்பா் 24 , 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளா்களிடமிருந்தும், இந்த துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தோ்ச்சி பெற்றவா்களிடமிருந்தும், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சார பணியாளா், கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரா் மின்வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறைவின்றி செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

ADVERTISEMENT

இந்தத் தோ்வுக்குரிய விண்ணப்பப்படிவம், விளக்கக் குறிப்பேட்டினை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தோ்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டத்திலுள்ளஅரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தோ்வு செய்து, அந்த தோ்வு மையத்துக்கு அனுப்ப வேண்டும்.

போதுமான விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்றால் தோ்வு மையத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டு, அங்கு தோ்வுகள் நடத்தப்படும். தோ்வு மையம் இறுதி செய்வது தொடா்பாக துறைத் தலைவரின் முடிவே இறுதியானது.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT