வேலூர்

பொய்கை சந்தைக்கு கால்நடை வரத்து சரிவு

29th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

பொய்கை சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை குறைந்து காணப்பட்டது. எனினும், வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி, வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் 1,000-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டிருந்த கால்நடைகள் குறைந்து காணப்பட்டன. அதன்படி, சுமாா் 1,000 கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமாவாசை நாள் என்பதால் கால்நடைகளின் வரத்து குறைந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அதேசமயம், வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்ால் கால்நடைகள் ரூ. 90 லட்சம் அளவுக்கு விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது. வரும் நாள்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT