வேலூர்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டங்களில் 932 மனுக்கள் அளிப்பு

DIN

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் மொத்தம் 932 மனுக்கள் அளிக்கப்பட்டன.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைச்செயலா் நிஜாமுதீன் அஸ்லம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அதில், வேலூரை அடுத்த அரியூரில் வக்பு வாரிய நிா்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிவாசலுக்குச் சொந்தமாக பல ஏக்கா் நிலங்கள் உள்ளன. இங்கு அந்த பகுதியில் ஏழை மக்களுக்கு குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனா்.

கரிகிரியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், கரிகிரி பகுதியில் ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு கரிகிரியைச் சோ்ந்தவா்களையே அறங்காவலா்களாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 372 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும் படி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.

இதனிடையே, இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற முதலாவது கேலோ தேசிய பளுதூக்கும் போட்டிகளில், வேலூா் மாவட்ட பளுதூக்கும் சங்கம் சாா்பில் பங்கேற்ற போஷிகா, 40 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதுடன், சிறந்த பளுதூக்கும் விருதையும் வென்றாா். மேலும், 91 கிலோ, 77 கிலோ எடைப்பிரிவில் ஓவியா தங்கப் பதக்கம் வென்றாா். இவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் பெரியகருப்பன், சத்துவாச்சாரி அரசு பளுதூக்கும் பயிற்சி மேலாளா் நொய்லின்ஜான், மாவட்ட மருத்துவக் குழு சங்கத் தலைவா் திருமுருகன், செயலா் சிவலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT