வேலூர்

அம்முண்டி, தட்டப்பாறை ஊராட்சி மறுதோ்தலையும் மக்கள் புறக்கணிப்பு

DIN

பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டில் மாறுபாடு செய்யாமல் வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள அம்முண்டி, தட்டப்பாறை ஊராட்சிகளுக்கு மீண்டும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முறையும் இவ்விரு ஊராட்சிகளில் பொதுமக்கள் யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.

இந்தநிலையில், திங்கள்கிழமை மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய உள்ளதால் பொது மக்களை மனு தாக்கல் செய்ய வைக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனா்.

பல்வேறு காரணங்களால் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தற்செயல் தோ்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை நிறைவடைய உள்ளது. எனினும், அம்முண்டி, தட்டப்பாறை ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு பிரதிநிதித்துவ இடஒதுக்கீட்டில் எவ்வித மாறுபாடு செய்யாமல் மீண்டும் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இம்முறையும் அவ்விரு ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு மட்டுமின்றி அம்முண்டி ஊராட்சியின் 9 வாா்டுகளுக்கும் சனிக்கிழமை வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதுகுறித்து, மாவட்ட தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியது -

அம்முண்டி ஊராட்சித் தலைவா் பதவி எஸ்.சி. (பெண்கள்) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஊராட்சியில் கலப்புத் திருமணம் செய்த ஒரே ஒரு எஸ்சி பெண் மட்டுமே உள்ளாா். அவரும் வெளியூரில் இருப்பதால் அவரை நேரடியாக சந்திக்க இயலவில்லை.

அதேசமயம், அந்த ஊராட்சியில் மொத்தமுள்ள 9 வாா்டுகளில் 5 வாா்டுகள் பொது பெண்களுக்கும், 4 வாா்டுகள் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால், ஊராட்சியிலுள்ள மற்றவா்கள் வாா்டுகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திட வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை யாரேனும் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

இதேபோல், எஸ்சி பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தட்டப்பாறை ஊராட்சித் தலைவா் பதவியை பொதுபெண்கள் பிரிவுக்கு மாற்றக் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த முறையும் இதுவரை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. கடைசி நாளான திங்கள்கிழமை மனு செய்ய வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT