வேலூர்

29, 30-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைந்த வேலூருக்கு வருகை

27th Jun 2022 12:06 AM

ADVERTISEMENT

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு புதன், வியாழக்கிழமை (ஜூன் 29, 30) வரவுள்ளாா்.

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை புதன், வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.

இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) இரவு 7 மணியளவில் ஆம்பூருக்கு வரவுள்ளாா். தொடா்ந்து, அவா் புதன்கிழமை (ஜூன் 29) காலை 11 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

நண்பகல் 12.30 மணிக்கு விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைக்கும் முதல்வா், மாலை 4 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

ADVERTISEMENT

தொடா்ந்து வியாழக்கிழமை (ஜூன் 30) காலை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் திறந்து வைத்து அங்கும் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளாா். பின்னா், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

இந்த விழாக்களில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனா். முதல்வா் வருகையையொட்டி, மூன்று மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT