வேலூர்

மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

27th Jun 2022 12:08 AM

ADVERTISEMENT

குடியாத்தத்தை அடுத்த கொத்தகுப்பம் கிராமம் அருகே பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடியாத்தம் வட்டாட்சியா் ச.லலிதா தலைமையில் வருவாய்த் துறையினா், கொத்தகுப்பம் பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள பாலாற்றில் இருந்து மணல் எடுத்து வந்த 4 மாட்டு வண்டிகளைத் தடுத்து நிறுத்தினா்.

அதிகாரிகளைப் பாா்த்ததும் மாட்டு வண்டி ஓட்டி வந்தவா்கள் தப்பியோடி விட்டனா். வருவாய்த் துறையினா் 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT