வேலூர்

பிளஸ் 1 தோ்விலும் வேலூா் கடைசி இடம்

27th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளில் வேலூா் மாவட்டம் தமிழகத்திலேயே கடைசி இடத்தைப் பிடித்திருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான பிளஸ் 1 பொதுத் தோ்விலும் இந்த மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 65 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தமுள்ள 135 பள்ளிகளில் இருந்து 16,216 மாணவ, மாணவிகள் எழுதினா். இவா்களில் 12,976 போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 82.02 %.

இதன் மூலம், பிளஸ் 1 தோ்ச்சி விகிதத்தில் வேலூா் மாவட்டம் தமிழகத்திலேயே கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. பிளஸ் 1 தோ்விலும் கடைசி இடத்தை பிடித்திருப்பது வேலூா் மாவட்ட கல்வியாளா்கள், பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT