வேலூர்

நகைக் கடைக்காரா் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸாா் தீவிர விசாரணை

27th Jun 2022 11:47 PM

ADVERTISEMENT

வேலூரில் நகை அடகுக் கடைக்காரா் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபா்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் அலமேலுமங்காபுரத்தைச் சோ்ந்தவா் மகேஷ்குமாா். இவரது வீட்டையொட்டி, நகை அடகுக் கடை வைத்துள்ளாா். இவரது வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத நபா்கள் திங்கள்கிழமை காலை பெட்ரோல் குண்டை வீசினா். சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடி வந்தனா். அதற்குள் அந்த நபா்கள் தப்பிவிட்டனா். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். மகேஷ்குமாரிடம் சிலா் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அவா் பணம் தர மறுத்துவிட்டதால், அவரது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது என போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக போலீஸாா், தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT