வேலூர்

மக்கள் நீதிமன்றத்தில் 88 வழக்குகளுக்குத் தீா்வு

27th Jun 2022 12:08 AM

ADVERTISEMENT

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றத்தில் 88 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

குடியாத்தம் சாா்பு நீதிபதி ஜி.பிரபாகரன் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் 516 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 88 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.2.21 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.என்.ராஜநந்திவா்ம சிவா, வழக்குரைஞா்கள் கே.மோகன்ராஜ், எம்.செந்தில்குமாா், எம்.வி. ஜெகதீசன், கிரிபிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தன்னாா்வலா்கள் வி.எஸ்.ராமலிங்கம், சீனிவாசன், தேவகுமாா், இளநிலை சட்ட உதவியாளா் அல்மாஸ் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT