வேலூர்

அக்னிபத் திட்டம்: ஒருங்கிணைந்த வேலூரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

27th Jun 2022 11:48 PM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் (திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை) காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞா்களைச் சோ்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் இளைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் கட்சி சாா்பில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் அண்ணா கலையரங்கம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாநகர தலைவா் டீக்காராமன் தலைமை வகித்தாா். இதில், மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், அக்னிபத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மண்டல தலைவா் ரகுபதி, இளைஞா் காங்கிரஸ் தலைவா் திவாகா், தலைமை நிலைய செயலா் துளசிராமன், மாநில சேவா துணைத் தலைவா் வேணுகோபால ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT