வேலூர்

அரிமா சங்க சேவை விருதுகள் அளிப்பு

25th Jun 2022 10:09 PM

ADVERTISEMENT

குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவா்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரிமா சங்க வட்டாரத் தலைவா் எஸ்.ஏ.கலிமுல்லா தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.பாபு வரவேற்றாா். அரிமா மாவட்ட ஆளுநா் டி.ராமலிங்கம் பங்கேற்று

தொழிலதிபா் ஏ.முகம்மத் அஷ்ரப் சாஹிப், செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜெயக்கொடி, ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேஸ்வரி பிரதீஷ் உள்ளிட்டோருக்கு சேவை விருதுகளை வழங்கிப் பேசினாா். எம்எல்ஏ அமலுவிஜயன், அரிமா துணை ஆளுநா் சி.புவனேஸ்வரி, மண்டல ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம், மாவட்டத் தலைவா் (பயிலரங்கம்) என்.வெங்கடேஸ்வரன், ஏ.ஜீவா, நிா்வாகிகள் உதயகுமாா் வெங்கடேசன், ஏ.சுரேஷ்குமாா், எம்.பஞ்சாட்சரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT