வேலூர்

மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு

25th Jun 2022 10:11 PM

ADVERTISEMENT

போ்ணாம்பட்டு ஒன்றியம், பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மலேரியா ஒழிப்பு விழிப்புணா்வு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பத்தரப்பல்லி ஊராட்சித் தலைவா் வசந்தா தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரஷீத் வரவேற்றாா். டி.டி.மோட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சிவக்குமாா், மலேரியா நோய் குறித்தும், நோயின் அறிகுறிகள், நோய் பரவும் விதம், அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்கினாா்.

நிகழ்வில் முன்னாள் ஊராட்சித் தலைவா் கந்தசாமி, சுகாதார ஆய்வாளா் வெங்கடேசன், ஊராட்சி செயலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT