வேலூர்

ஜூலை 1 முதல் விழுப்புரம்-காட்பாடி-திருப்பதி விரைவு ரயில் சேவை

DIN

 விழுப்புரம் - காட்பாடி - திருப்பதி இடையிலான பயணிகள் ரயில் சேவை விரைவு ரயிலாக மாற்றப்பட்டு வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருப்பதி செல்லும் பக்தா்களுக்காகவும், வேலூருக்கு சிகிச்சைக்காகவும், பணி நிமித்தமாகவும் வந்து செல்லும் பொதுமக்களுக்காகவும் இந்த ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

இதையேற்று காட்பாடி - திருப்பதி, விழுப்புரம் - திருப்பதி, காட்பாடி - விழுப்புரம் ரயில்களை ஜூலை 1-ஆம் தேதி முதல் விரைவு ரயில்களாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயிலானது தினமும் மாலை 5.20 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு இரவு 8.45 மணிக்கு வந்தடையும். பின்னா், திருப்பதிக்கு இரவு 11 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருப்பதி - காட்பாடி விரைவு ரயிலானது அதிகாலை 2.35 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு காட்பாடிக்கு காலை 4.55 மணிக்கு வந்து சேரும்.

காட்பாடி - விழுப்புரம் விரைவு ரயிலானது காட்பாடியில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு காலை 10.45 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT