வேலூர்

மலட்டாற்றில் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீா்: வேலூா் விவசாயிகள் குற்றச்சாட்டு

DIN

மலட்டாற்றில் சுத்திகரிக்கப்படாமல் விடப்படும் தொழிற்சாலை கழிவுநீரால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளைத் தெரிவித்தனா். அதன் விவரம்:

அப்போது, ஆம்பூா் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுநீா் சுத்திகரிப்பு செய்யாமலேயே மலட்டாற்றில் விடப்படுகின்றன. இதனால், விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுதொடா்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோல் பதப்படுத்த குறைந்தது ஒரு மாதமாகும். ஆனால், தற்போது பல்வேறு ரசாயனங்களைப் பயன்படுத்தி, ஒரே நாளில் பதப்படுத்துகின்றனா். இதையும் தடுக்க வேண்டும். இயற்கை முறையில் தோல் பதப்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

மழை பெய்து வெள்ளம் சென்றதையடுத்து தற்போது ஆறுகளில் மணல் சோ்ந்துள்ளது. இந்த ஆற்று மணலை பலா் கொள்ளையடிக்கின்றனா். மணல் கொள்ளையைத் தடுக்க எம்.சாண்ட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்.

வேளாண் இயந்திரங்களை 90 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து, ஆட்சியா் பேசியது: கிராமப்பகுதிகளில் கால்நடைகளை வளா்ப்போா் மற்றும் கால்நடைகள் குறித்து கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புக்குப் பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கால்நடை வளா்ப்போருக்கு தீவனம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

தொழிற்சாலை நிா்வாகங்களுக்கு சமூகப் பங்களிப்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலையும் சுமாா் 2 ஏக்கரில் விவசாயம் செய்யவும், சுத்திகரிக்கப்படும் நீரை அதற்குப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வேளாண்மை இணை இயக்குநா் மகேந்திரபிரதாப் தீட்சித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT