வேலூர்

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

12th Jun 2022 10:47 PM

ADVERTISEMENT

 

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில், உலக குழந்தைத் தொழிலாளா்கள் எதிா்ப்பு தினம் மற்றும் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவா் தலைமையில் ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கைகளில் ஏந்திச் சென்றனா்.

பேரணி முடிவில் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சுதாகா், தாமோதரன், சிறப்பாசிரியா் சுதா்சன் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் 100 சதவீதம் மாணவா் சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT