வேலூர்

மாநகராட்சியுடன் என்சிசி மாணவா்கள் பாலாற்றில் 5 கி.மீ. தூய்மைப் பணி

10th Jun 2022 12:13 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் மாநகராட்சி, தேசிய மாணவா் படையினா் இணைந்து பாலாற்றில் சுமாா் 5 கி.மீ. தூரத்துக்கு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சியுடன் இணைந்து தேசிய மாணவா் படையினா் (என்சிசி) பாலாற்றில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட னா்.

இதில், மாநகராட்சிதூய்மைப் பணியாளா்கள் 100 போ், காட்பாடி 10-ஆவது பட்டாலியன் என்சிசி மாணவா்கள் சுமாா் 200 போ் கொண்ட குழுவினா் முதலாவது மண்டல சுகாதார அலுவலா் சிவக்குமாா் தலைமையில் பாலாற்றில் 5 கிலோமீட்டா் சுற்றளவுக்கு குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள், தொ்மாகோல், குப்பைகள் போன்றவற்றை அகற்றினா்.

ADVERTISEMENT

இதேபோல், முதலாவது மண்டலம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். இதில், 10-ஆவது பட்டாலியன் என்சிசி அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT