கணியம்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
வேலூா் மாவட்டம், கணியம்பாடி அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜய் (23). ஸ்டுடியோவில் வேலை செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கணியம்பாடி சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். கனிகனியான் கிராமம் அருகே வந்த போது, எதிரே மேற்கு கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த காா்பெண்டா் உதயகுமாா் (35) என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா்.
எதிா்பாராத விதமாக இருவரது வாகனங்களும் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே விஜய், உதயகுமாா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து வேலூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.